ஆட்டோ டிப்ஸ்

மாருதி கார் வாங்குவதற்கான காத்திருப்பு காலம் மேலும் அதிகரிப்பு!

Published On 2022-12-16 13:58 GMT   |   Update On 2022-12-16 13:58 GMT
  • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்கள் இந்திய விற்பனையில் பெருமளவு வரவேற்பை பெற்று வருகிறது.
  • அடுத்த மாதம் முதல் மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்களை வாங்க முன்பதிவு செய்தவர்கள், அவற்றை டெலிவரி எடுக்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி கார்களின் வினியோகம் அதிகபட்சம் ஒன்பது மாதங்கள் வரை தாமதமாகிறது. கார்களின் காத்திருப்பு காலம், ஒவ்வொரு பகுதி மற்றும் மாடலுக்கு ஏற்ப வேறுபடும்.

அரினா பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மாடலை டெலிவரி எடுக்க வாடிக்கையாளர்கள் ஒன்பது மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பிரெஸ்ஸா மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் முறையே மூன்று மற்றும் 2.5 மாதங்கள் ஆகும். டிசையர் மாடலுக்கு ஒரு மாதமும், ஆல்டோ மாடல் ஒரே வாரத்திலும் டெலிவரி செய்யப்படுகிறது.

இதுதவிர வேகன்ஆர், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற அரினா பிரிவு மாடல்களின் காத்திருப்பு காலம் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நெக்சா பிரிவில் மாருதி கிராண்ட் விட்டாரா, XL6 மற்றும் பலேனோ மாடல்களின் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள் வரை உள்ளது.

மாருதி சியாஸ் மாடலை டெலிவரி எடுக்க வாடிக்கையாளர்கள் 1.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இக்னிஸ் மாடல் ஒரு மாதத்திற்குள் வினியோகம் செய்யப்படுகிறது. காத்திருப்பு காலம் தவிர மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News