ஆட்டோ டிப்ஸ்
null

9 ஆயிரம் கார்களை ரிகால் செய்யும் மாருதி சுசுகி

Published On 2022-10-31 11:06 GMT   |   Update On 2022-10-31 11:07 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது CNG மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
  • மாருதி சுசுகி செலரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன்ஆர், செலரியோ, இக்னிஸ் கார்களின் 9 ஆயிரத்து 925 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 3, 2022 முதல் செப்டம்பர் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

ரிகால் செய்யப்படும் கார்களின் ரியர் பிரேக் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசெம்ப்லி பின் உடைந்து, வித்தியாசமான சத்தம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். வேகன்ஆர் மற்றும் செலரியோ மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இக்னிஸ் மாடல் மட்டும் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது.

"ரியர் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அசெம்ப்லி பின் உடைந்து வித்தியாசமான சத்தம் எழ வாய்ப்புகள் உண்டு. நாளடைவில் காரின் பிரேக்கிங் திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். வாடிக்கையாளர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட யூனிட்களை ரிகால் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பாதிக்கப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்பட்டு இலவசமாக சரி செய்யப்படும்," என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ரிகால் செய்யப்படும் கார்களில் புதிதாக வழங்க மாற்று பாகங்கள் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். அதன் பின் கார் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பிரச்சினைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்யப்படும்.

Tags:    

Similar News