2022 எம்.ஜி. ஹெக்டார் டீசர் வெளியீடு
- எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- விரைவில் இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஹெக்டார் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஒற்றை டீசரில் புது கார் 14 இன்ச் அளவில் போர்டிரெயிட் ஸ்டைல் செண்டர் கன்சோல்-மவுண்ட் செய்யப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
இன்போடெயின்மெண்ட் யூனிட் தவிர இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடல் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, நடுவில் ஏர்கான் வெண்ட்கள், சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ரி-வொர்க் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், ரி-ஷேப் செய்யப்பட்ட கியர் லீவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் மாடலில் முற்றிலும் புது முன்புற கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் யூனிட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம்.
இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டார் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.