ஆட்டோ டிப்ஸ்

303 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் ஓலா ஸ்கூட்டர்

Published On 2022-07-14 11:30 GMT   |   Update On 2022-07-14 11:30 GMT
  • ஓலா நிறுவனம் இந்திய சந்தையில் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
  • சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கு மூவ் ஓ.எஸ். 2 அப்டேட் வழங்கியது.

ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கி.மீ. ரேன்ஜ் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மூவ் ஓ.எஸ். 2 அப்டேட்டிற்கு பின் புதிய இகோ மோட் பயன்படுத்தியதில் இத்தனை கி.மீ. ரேன்ஜ் கிடைத்தது.

ட்விட்டர் பயனரான சத்யேந்திர யாதவ் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐந்து சதவீதம் சார்ஜ் மீதம் இருக்கும் நிலையில், 300 கி.மீ. வரை பயணம் செய்து இருக்கிறார். இவரது ஸ்கூட்டரின் டேஷ்போர்டு விவரங்களின் படி ஸ்கூட்டரை மணிக்கு 20 கி.மீ. எனும் சராசரி வேகத்தில் இயக்கிய போது 300 கி.மீ. ரேன்ஜ் கிடைத்து இருக்கிறது. இந்த பயணத்தின் போது அதிகபட்சம் வேகம் மணிக்கு 38 கி.மீ ஆக இருந்துள்ளது.


மற்றொரு பயனர் தனது ஸ்கூட்டரில் நான்கு சதவீதம் சார்ஜ் மீதம் இருந்த நிலையில் 303 கி.மீ. வரை பயணம் செய்து அசத்தி இருக்கிறார். இவரின் டேஷ்போர்டு விவரங்களின் படி ஸ்கூட்டரை மணிக்கு 23 கி.மீ. எனும் சராசரி வேகத்தில் இயக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இவரின் ஸ்கூட்டர் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது.

முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு 200 கி.மீ. ரேன்ஜ் எட்டி வாடிக்கையாளர்களுக்கு லிமிடெட் எடிஷன் குயெரா ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கி இருக்கிறார். புதிதாக 300 கி.மீ. ரேன்ஜ் எட்டியவர்களுக்கு இதே போன்று பரிசு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News