ரூ. 57 கோடி விலையில் புது கார் அறிமுகம்
- பகானி நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த கார் மொத்தத்தில் ஐந்து யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தயாளரான பகானி, லிமிடெட் எடிஷன் ஹூயாரா கொடலுங்கா (Huayra Codalunga) சூப்பர் காரை அறிமுகம் செய்தது. இந்த மாடல் உலகம் முழுக்க வெறும் ஐந்து யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஐந்து யூனிட்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தன.
பகானி ஹூயாரா கொடலுங்கா கார் ஹூயாரா கூப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் நீன்ட டெயில் கொண்டுள்ளது. இதுவும் காரின் என்ஜின் கவர் பகுதியில் உள்ளது. இதில் உள்ள என்ஜின் கவர் முந்தைய கூப் மாடலில் உள்ளதை விட 360 மில்லிமீட்டர் நீளமாக காட்சி அளிக்கிறது.
எக்ஸ்டெண்டட் என்ஜின் கவர் மட்டும் இன்றி, கொடலுங்கா மாடலில் புதிய முன்புற பம்ப்பர், அகலமான முன்புற ஏர் இன்டேக், ரிவைஸ் செய்யப்பட்ட ஸ்ப்லிட்டர் உள்ளது. இதில் உள்ள ட்வின் சைடு ஏர் இண்டேக்குகள், ட்வின் டர்போ வி12 AMG என்ஜினுள் காற்றை இழுக்கிறது.
காரின் பின்புறம் நீட்டிக்கப்பட்ட என்ஜின் கவர் ஹூயாரா ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள டெயில் லைட்களை நீக்கி இருக்கிறது. பின்புறம் கிரில் இல்லை என்பதால், கொடலுங்காவின் டைட்டானியம் எக்சாஸ்ட் சிஸ்டத்தை முழுமையாக பார்க்க முடியும்.