ஆட்டோ டிப்ஸ்

விற்பனையில் மாஸ் காட்டும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350

Published On 2022-09-16 10:32 GMT   |   Update On 2022-09-16 10:32 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலாக புதிய ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.
  • இளம் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஏராள மாற்றங்கள் மற்றும் புது அம்சங்களுடன் இந்த பைக் அறிமுகமாகி இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை ஆகஸ்ட் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடல் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை, எடை கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் 349 சிசி, சிங்கில் சிலிண்டர் OHC பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உள்ளது.

ஆகஸ்ட் 2022 மாதத்தில் மட்டும் ஹண்டர் 350 மாடல் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடம் ஆகும். கடந்த மாத விற்பனையில் அசத்திய கிளாசிக் 350 மாடலை விட ஹண்டர் 350 வெறும் 796 யூனிட்கள் தான் பின்தங்கி இருக்கிறது.

Tags:    

Similar News