ஆட்டோ டிப்ஸ்

டிசம்பர் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை முந்திய டாடா மோட்டார்ஸ்!

Published On 2023-01-06 11:33 GMT   |   Update On 2023-01-06 11:33 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • இந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடல் வினியோகத்தை துவங்க இருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் டிசம்பர் 2022 மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தியுள்ளது. கடந்த மாதம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 ஆயிரத்து 045 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 35 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி விற்பனையில் 13.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 38 ஆயிரத்து 831 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது 2021 ஆண்டு டிசம்பரில் ஹூண்டாய் நிறுவனம் 32 ஆயிரத்து 312 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி வாகன விற்பனையில் 20.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனத்தை விட அதிக யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் விற்பனையில் ICE மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடல் வினியோகத்தை துவங்க இருக்கிறது. முன்னதாக டியாகோ EV காரின் டெஸ்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் EV மாடலை 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News