பைக்

ஆஃப் ரோடிங் அம்சங்களுடன் 2023 சுசுகி வி ஸ்டாம் 1050DE அறிமுகம்

Published On 2022-09-06 10:22 GMT   |   Update On 2022-09-06 10:22 GMT
  • சுசுகி நிறுவனத்தின் 2023 வி ஸ்டாம் 1050DE மேட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடிங் அம்சங்கள், 5 இன்ச் ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கொண்டிருக்கிறது.

சுசுகி நிறுவனம் 2023 சுசுகி வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XT மாடல் நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய வி ஸ்டாம் 1050DE மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய DE வேரியண்ட் வி ஸ்டாம் 1050 ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.

இரு வேரியண்ட்களிலும் புதிய 5 இன்ச், ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அப்-டவுன் குயிக்-ஷிப்டர், செண்டர் ஸ்டான்டு, ஹேண்ட் கார்டு, யுஎஸ்பி, 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1037 சிசி, லிக்விட் கூல்டு, 90 டிகிரி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105.5 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, புதிய DE வேரியண்ட் ஆஃப் ரோடிங் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய வி ஸ்டாம் 1050DE மாடலில் அதிக சஸ்பென்ஷன் டிராவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் 6 ஆக்சிஸ் IMU, லீன் சென்சிடிவ் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

மேலும் மேம்பட்ட ரைடு பை வயர் திராட்டில், குரூயிஸ் கண்ட்ரோல், 3 ஸ்டேஜ் டிராக்‌ஷன் கண்ட்ரோல், மூன்று பவர் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் DE வேரியண்டில் புதிதாக G மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆஃப் ரோடிங்கின் போது பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News