பைக்

இணையத்தில் லீக் ஆன ஹீரோ ஸ்கூட்டர் விவரங்கள்

Published On 2022-09-12 09:11 GMT   |   Update On 2022-09-12 09:11 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதிய ஹீரோ ஸ்கூட்டர் 110 சிசி பிரிவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி மற்றும் புது ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஹீரோ ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய மேஸ்ட்ரோ சூம் 110 இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


அம்சங்களை பொருத்த வரை இந்த மாடலில் எல்இடி இலுமினேஷன் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டெலிஸ்கோபிக் போர்க், சிங்ரிவ் ரியர் ஷாக், முன்புறம் டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் புது மாடல் 12 இன்ச் வீல்களுடன் வருகிறது.

ஹீரோ நிறுவனம் புது மேஸ்ட்ரோ சூம் 110 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய மேஸ்ட்ரோ சூம் 110 விலை ரூ. 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம். இந்தியாவில் புதிய ஹீரோ மேஸ்ட்ரோ சூம் 110 மாடல் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Photo Courtesy: Gaadiwaadi

Tags:    

Similar News