பைக்

திடீரென இரு மோட்டார்சைக்கிள் விலையை மாற்றிய கவாசகி

Published On 2022-08-24 09:38 GMT   |   Update On 2022-08-24 09:38 GMT
  • கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மற்றும் வல்கன் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
  • இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்திய சந்தையின் மிடில்-வெயிட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கவாசகி இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மாற்றியமைத்து வருகிறது. இந்த வரிசையில், அந்நிறுவனத்தின் மிடில்-வெயிட் மாடல்களான நின்ஜா 650 மற்றும் வல்கன் எஸ் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஃபுலி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் விலை தற்போது ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. குரூயிசர் மாடல் விலை தற்போது ரூ. 6 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


புதிய விலை விவரங்கள்:

கவாசகி நின்ஜா 650 ரூ. 6 லட்சத்து 95 ஆயிரம்

கவாசகி வல்கன் எஸ் ரூ. 6 லட்சத்து 40 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விலை தவிர இரு மாடல்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கவாசகி நின்ஜா 650 மற்றும் வல்கன் எஸ் மாடல்களில் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. நின்ஜா 650 மாடலில் இந்த என்ஜின் 67.3 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

கவாசகி வல்கன் எஸ் மாடலில் இந்த என்ஜின் 60 ஹெச்பி பவர், 62.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. நின்ஜா 650 மாடல் லைம் கிரீன், பியல் ரோபோடிக் வைட் நிறங்களிலும் வல்கன் எஸ் மாடல் மெட்டாலிக் மேட் கிராபீன்ஸ்டீல் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

Tags:    

Similar News