கார்

28.51 கிமீ மைலேஜ் வழங்கும் கார்... இந்தியாவில் அறிமுகமான மாருதி Fronx CNG!

Published On 2023-07-13 05:51 GMT   |   Update On 2023-07-13 05:51 GMT
  • புதிய மாருதி Fronx CNG மாடல் சிக்மா மற்றும் டெல்டா என்று இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • மாருதி Fronx CNG வேரியண்டில் 1.2 லிட்டர், K சீரிஸ், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் Fronx மாடலின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி Fronx CNG விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி Fronx CNG மாடல் சிக்மா மற்றும் டெல்டா என்று இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மாருதி Fronx CNG வேரியண்டில் 1.2 லிட்டர், K சீரிஸ், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 28.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.

 

அம்சங்களை பொருத்தவரை மாருதி Fronx CNG மாடலில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்கிங் சென்சார்கள், 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட், ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx CNG மாடலை பயனர்கள் மாதாந்திர சந்தா முறையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 23 ஆயிரத்து 248 ஆகும். மாருதி சுசுகி சப்ஸ்கிரைப் திட்டத்தின் கீழ் இந்த வசதி வழங்கப்படுகிறது.

விலையை பொருத்தவரை மாருதி Fronx CNG சிக்மா மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், Fronx CNG டெல்டா மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 9 லட்சத்து 27 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News