கார்

புதிய பாதுகாப்பு அம்சம்.. கிரான்ட் விட்டாரா விலையை மாற்றிய மாருதி சுசுகி

Published On 2023-07-19 04:54 GMT   |   Update On 2023-07-19 04:54 GMT
  • மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ், ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
  • மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வேரியன்ட்களில் புதிய அம்சம் வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களில் "அகௌஸ்டிக் வெஹிகில் அலெர்டிங் சிஸ்டம்" எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது.

புதிய அம்சம் சாலையில் வாகனம் செல்வது பற்றிய தகவலை ஓட்டுனர் மற்றும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும். இதற்கு இந்த சிஸ்டம் பாதசாரிகளுக்கு சவுன்ட் அலெர்ட் கொடுக்கும். இது வாகனத்தில் இருந்து அதிகபட்சம் ஐந்து அடி தூரம் வரை கேட்கும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், அனைத்து ஹைப்ரிட் வேரியன்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்கள் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.

Tags:    

Similar News