கார்

மூன்று கார்களின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்த டாடா மோட்டார்ஸ்

Published On 2022-08-29 13:46 GMT   |   Update On 2022-08-29 13:46 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எஸ்யுவி மாடல்களின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புது ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவிக்கள் விலை ரூ. 12 லட்சத்து 13 ஆயிரம் என துவங்குகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான், ஹேரியர் மற்றும் சபாரி போன்ற எஸ்யுவி மாடல்களின் ஜெட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஜெட் எடிஷன் தனது எஸ்யுவிக்களின் மிகவும் பிரீமியம் மாடல்களாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக தான் எண்ட்ரி லெவல் மைக்ரோ எஸ்யுவி மாடலான பன்ச் ஜெட் எடிஷனில் அறிமுகம் செய்யப்படவில்லை. புதிய நெக்சான் XZ+ ஜெட் எடிஷன் விலை ரூ. 12 லட்சத்து 13 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டாடா சபாரி XZA+ ஜெட் எடிஷன் விலை ரூ. 22 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.


"இந்திய சந்தையில் முன்னணி எஸ்யுவி விற்பனையாளர் மற்றும் புதிய பிராண்டு கொள்கையின் படி சபாரி, ஹேரியர் மற்றும் நெக்சான் கார்களின் ஜெட் எடிஷனை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாட முடியும்."


"புதிய ஜெட் எடிஷன் அசத்தலான வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்புகள் பயனர் விரும்பும் வதையில் மிகவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவுக்கான விளம்பரம், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News