இது புதுசு

இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published On 2022-12-12 11:40 GMT   |   Update On 2022-12-12 11:40 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 31 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது.
  • இந்த ஸ்கூட்டரில் ரைடு மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் என ஏராளமான அம்சங்கள் உள்ளன.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது 2023 S1000RR மோட்டாகர்சைக்கிளுடன் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லாங் சைடு பேனல்கள், எல்இடி ஹெட்லைட், டிசைன் பிட்கள் உள்ளன. ஒற்றை பீஸ் இருக்கை, மஸ்குலர் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் பீக் பவர் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்ர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. வழக்கமான சார்ஜர் மூலம் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 4 மணி 20 நிமிடங்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 மணி 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திடலாம்.

பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் கொண்டிருக்கஇறது. பிரேக்கிங்கிற்கு 265mm முன்புற சிஸ்ர், பின்புற டிஸ்க் 15 இன்ச் வீல்களில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் முழன்புறம் 120 பின்புறம் 160 டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் நேவிகேஷன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீடு பற்றி பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

Tags:    

Similar News