சினிமா செய்திகள்
null

கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் டும்...டும்...டும்...

Published On 2024-11-29 07:34 GMT   |   Update On 2024-11-29 08:44 GMT
  • கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
  • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியானது. 15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டு இருந்தார். இதனால் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்.... எப்போ... எங்கே நடைபெறுகிறது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும் போது, இந்தியில் 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் ஏழுமலையானை தரிசித்தேன். திருமணம் கோவாவில் நடைபெறுகிறது என்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


Full View


Tags:    

Similar News