சினிமா செய்திகள்

எக்காரணத்தை கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள் - செல்வராகவன் கொடுத்த அட்வைஸ்

Published On 2024-09-30 10:07 GMT   |   Update On 2024-09-30 10:07 GMT
  • துனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
  • செல்வராகவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர்.

இயக்குனர் செல்வராகவன் கடைசியாகதுனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.அடுத்து செல்வராகவன் படத்தை இயக்கவுள்ளார் அதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

இது தவிர செல்வராகவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். தனக்கு தோன்றும் கருத்துகளையும் , அறிவுறைகளையும், சிந்தனைகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். சில வாரங்களுக்கு முன் நடந்த மகா விஷ்ணி மூட நம்பிக்கை பேச்சாளரை குறித்து விமர்சனம் செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு கருத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர்

காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள். என கூறியுள்ளார். இந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News