சினிமா செய்திகள்

சிங்கம் ஒன்று புறப்பட்டதே - வேட்டையன் படப்பிடிப்பிற்கு கிளம்பிய ரஜினிகாந்த்

Published On 2024-05-02 12:26 GMT   |   Update On 2024-05-02 12:26 GMT
  • வேட்டையன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தன
  • இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வேட்டையன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தன. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு காரில் வந்து இறங்கிய ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வயதானாலும் அவரின் நடை மற்றும் பேச்சு என்றும் இளமையாகவுள்ளது என அந்த வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி ரசிகர்களுடனும் , மஞ்சு வாரியரின் தம்பியான மது வாரியருடன் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News