விமான பயணத்தில் மாயமான 'லக்கேஜ்'.. கோபத்தில் நடிகர் ராணா
- பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலம்டைந்தவர் நடிகர் ராணா.
- தனியார் விமான பயணத்தின் போது தனது ‘லக்கேஜ்’ மாயமானதாக ராணா கோபமடைந்து பதிவிட்டுள்ளார்.
நடிகர், நடிகைகள் சிலருக்கு விமான பயணத்தில் அவ்வப்போது சில அசவுகரியங்கள் ஏற்படுவதும், அதை அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது. இதில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்து இருக்கிறார். இவர் தனியார் விமானம் ஒன்றில் பயணித்தபோது அவரது பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மாயமாகி விட்டது.
இதுகுறித்து ராணா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''விமான பயணத்தில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. விமானத்தில் காணாமல் போன எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். இந்த விஷயம் சக பயணிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். இதை விட கேவலம் இருக்குமா?" என்று கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட விமான நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களையும் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்.