ரஜினி சார் கடைசி நாளில் ஒரு விஷயம் தான் சொன்னார்- வசந்த் ரவி
- ’ஜெயிலர்’ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலித்தது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் வசந்த் ரவி கூறியதாவது, நான் நடித்த மூன்று படங்கள் தாண்டி 'ஜெயிலர்' என் வாழ்க்கையின் மையில்கல். ரஜினியுடன் ஒரு காட்யிலாவது நடித்து விட மாட்டோமா என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு. அந்த கனவு எனக்கு நிறைவேறியுள்ளது. அதற்கு ரஜினி சாருக்கு ரொம்ப நன்றி.
படப்பிடிப்பில் ரஜினி சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். படம் முடியும் போது எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. அப்போது ரஜினி சாரின் உங்களுடன் நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறினேன். அதற்கு ரஜினி சார் கண்டிப்பாக நிச்சயம் இன்னொரு படம் பண்ணுவோம் என்று கூறினார்.