null
படப்பிடிப்பை தொடங்கிய ஜோதிகா படக்குழு
- ஜியோ பேபி இயக்கவுள்ள "காதல் - தி கோர்" என்ற படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
- இப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
காதல் - தி கோர்
தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். ஜோதிகாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கு 'காதல் - தி கோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
காதல் - தி கோர் படக்குழு
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காதல் - தி கோர்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ஜியோ பேபி, மம்முட்டி, ஜோதிகா காம்போவில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
.@KaathalTheCore Starts Rolling from Today@MKampanyOffl @DQsWayfarerFilm @Truthglobalofcl pic.twitter.com/4sn2GZOTGC
— Mammootty (@mammukka) October 20, 2022