null
விரைவில் ரிலீஸ் - புது போஸ்டர் வெளியிட்ட கருடன் படக்குழு
- கருடன் படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் மே மாதம் ரிலீசாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. எனினும், எந்த தேதியில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்படவில்லை. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கருடன் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.