நெட்ப்ளிக்ஸில் நம்பர் 1.. ஓ.டி.டி.யிலும் மாஸ் காட்டிய விஜய்யின் "தி கோட்"
- விஜய்யின் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- கடந்த 3 ஆம் தேதி தி கோட் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.
கடந்த 3 ஆம் தேதி விஜய்யின் "தி கோட்" (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் தி கோட் முதலிடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.