எமர்ஜென்சி படத்திற்கு அனுமதி வழங்கியது தணிக்கைக் குழு
- செப்டம்பர் 6-ந்தேதி படம் ரிலீஸ் ஆக இருந்தது.
- தணிக்கைக்குழு அனுமதி அளிக்காததால் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 முதல் 1977 வரை 21 மாதங்கள் எமர்ஜென்சி இந்தியாவில் அமலில் இருந்தது. இதை மையமாக வைத்து எமர்ஜென்சி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டதை காண்பிக்கக் கூடாது என கங்கனா ரனாவத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இப்படத்தை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் துணை தயாரிப்பாளரும் அவர்தான். கடந்த செப்டம்பர் 6-ந்தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சீக்கிய அமைப்பினர் ஆட்சேபனை தெரிவிக்க படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. தணிக்கைக் குழு பல காட்சிகளை நீக்க வலியுறுத்தியது. அத்துடன் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் படத்தை தயாரித்த நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கக் கோரி தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.
உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கங்கனா ரனாவத் நாங்கள் தெரிவித்த காட்சியை நீக்க ரனாவத் சம்மதம் தெரிவித்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கைக் குழு அனுமதி அளித்துள்து. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அமைதி மற்றும் ஆதரவு தெரிவித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு (Zee Entertainment Enterprises) நன்றி என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் மும்பையில் உள்ள தனது சொத்தை விற்கும் கட்டாயம் ஏற்பட்டது என ரனாவத் தெரிவித்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.