கிரிக்கெட்

ரூ.125 கோடி பரிசுத்தொகை: யார் யாருக்கு எவ்வளவு- பிசிசிஐ அறிவிப்பு

Published On 2024-07-08 13:56 GMT   |   Update On 2024-07-08 13:56 GMT
  • இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது.
  • பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது. பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.

இந்நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கபட்டுள்ளது.

Tags:    

Similar News