கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா

Published On 2023-11-16 16:42 GMT   |   Update On 2023-11-16 16:42 GMT
  • டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.

கொல்கத்தா:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 47 ரன்னில் அவுட்டானார்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 30 ரன்னும், வார்னர் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

கடைசியில் போராடிய இங்கிலிஸ் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News