உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு இதெல்லாம் நடக்கும்: விராட் கோலிக்கு ஆதரவளித்த கெயில்
- நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
- 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார்கள் அல்லது விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு நடக்கும்.
முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்.
இது யாருக்கும் ஏற்படலாம். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்.
சில சமயங்களில் பெரிய வீரர்களை அழைக்கலாம், மேலும் முன்னேறி அணிக்கான உண்மையான ஆட்டத்தையும் வெல்லலாம்.
விராட் கோலி போன்ற ஒரு வீரரை சந்தேகமின்றி நீக்க முடியாது. அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிவோம்.
எனவே அவர் இறுதிப்போட்டியில் என்ன வழங்குவார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.