கிரிக்கெட் (Cricket)

ரூதர்ஃபோர்ட்-கனே வில்லியம்சன் 

வில்லியம்சன் இடத்தை பிடித்த ரூதர்ஃபோர்ட்- 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்

Published On 2022-06-10 06:33 GMT   |   Update On 2022-06-10 06:33 GMT
  • நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜோரூட் தேர்வு செய்யப்பட்டார்.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சனுக்கு பதிலாக ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News