கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. டைம் அவுட்டில் வெளியேறிய மேத்யூஸ்- வைரல் வீடியோ
- 3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 5 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 135 ரன்கள் இருந்த போது சமீரா அவுட் ஆனார். அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார்.
3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார். அந்த ஹெல்மெட் வருவதற்கு காலதாமதம் ஆனதால் நடுவர் அவுட் கொடுத்தார்.
மேத்யூஸ் இது குறித்து நடுவர் மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையிட்டார். ஆனால் இருவரும் விதிப்படி அவுட் என கூறினர். இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் மேத்யூஸ் வெளியேறினார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.