கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆனாரா? இந்திய பயிற்சியாளர் சொன்ன பதில்

Published On 2023-12-11 12:59 GMT   |   Update On 2023-12-11 12:59 GMT
  • உச்சக்கட்ட உதாரணமாக இந்திய வீரர் விராட் கோலி இருக்கிறார்.
  • ஃபிட்னஸ் குறித்த கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டு அறிமுகமான காலத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்க உடற்தகுதி அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. கிரிக்கெட்டில் உடற்தகுதி மிகவும் அவசியம் என்ற காலம் இது. இதற்கு உச்சக்கட்ட உதாரணமாக இந்திய வீரர் விராட் கோலி இருக்கிறார்.

இவர் தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் யோயோ ஃபிட்னஸ் டெஸ்ட் எனும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இருந்தது. எனினும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஃபிட்னஸ் குறித்த கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ரோகித் சர்மா எத்தனை போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது.

 


இந்த நிலையில், ரோகித் சர்மா யோ யோ ஃபிட்னஸ் டெஸ்ட்-இல் தேர்ச்சி பெற்று இருக்கிறாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ள அன்கிட் கலியர் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "ரோகித் சர்மா ஃபிட்-ஆன வீரர். அவரது ஃபிட்னஸ் சிறப்பாக உள்ளது. அவர் உடல் தோற்றம் பருமன் அதிகமாக இருப்பதை போன்று காட்சியளிக்கலாம், ஆனாலும், அவர் யோ யோ டெஸ்டில் எப்போதுமே தேர்ச்சி பெற்றிடுவார். விராட் கோலி போன்றே அவரும் நல்ல உடல்நிலையில் உள்ளார்."

"அவர் சற்று பருமன் கொண்டவர் போன்று காட்சியளித்தாலும், களத்தில் அவரின் செயல்பாட்டை நாம் பார்த்திருக்கிறோம். கட்டுக்கோப்பான உடற்தகுதி கொண்ட கிரிக்கெட் வீரர்களில் அவர் நிச்சயம் இடம்பிடித்துள்ளார்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News