கிரிக்கெட்
null

அந்த இந்தியருடன் என்னை ஒப்பிடாதீங்க.. இளம் பாகிஸ்தான் வீரர் கருத்து

Published On 2023-07-19 09:30 GMT   |   Update On 2023-07-19 09:51 GMT
  • இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது.
  • சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் தான் முகமது ஹாரிஸ். சர்வதேச கிரிக்கெட்டின் தனது முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், தனது அதிரடியான ஆட்டம் காரணமாக தனித்து விளங்குகிறார்.

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஏ.சி.சி. எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணியில் முகமுது ஹாரிஸ் விளையாடி வருகிறார். இந்த தொடரில் பாகிஸ்தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. வித்தியாசமான ஷாட்களை விளையாடி வரும் அவரை இந்திய அணியின் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவுடன் உடன் ஒப்பிட்டு கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ் பெயருடன் ஒப்பிட விரும்பவில்லை என இளம் பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது. சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன். அந்த இடத்தை அடைவதற்கு நான், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

மேலும் சூர்யா தனக்கென ஒரு இடத்திலும், ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது சொந்த அளவிலும், நான் எனது சொந்த அளவில் இருக்கிறேன். நான் எனக்கென 360 டிகிரி கிரிக்கெட்டர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறேன். அவர்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

Tags:    

Similar News