2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 40 சதவீதம் அபராதம்
- 2-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் 10-ந் தேதி தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மெதுவாக பந்து வீசும் ஒவ்வொரு ஒவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, வீரர்களுக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியை அணி இழக்க நேரிடும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 27-ந் தேதி லீட்ஸில் மைதானத்தில் தொடங்குகிறது.