கிரிக்கெட் (Cricket)

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விடுதலை

Published On 2024-05-15 14:23 GMT   |   Update On 2024-05-15 14:23 GMT
  • ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
  • 23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

2022ம் ஆண்டு ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மாண்டு நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது

23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News