147 வருட கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைப் படைத்த இலங்கை பேட்ஸ்மேன்
- கமிந்து மெண்டிஸ் முதல் இன்னிங்சில் 102 ரன்கள் விளாசினார்.
- 2-வது இன்னிங்சில் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசினார்.
முதல் இன்னிங்சில் 7-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் 102 ரன்கள் விளாசினார். தனஞ்ஜெயா டி சில்வா உடன் சேர்ந்து 202 ரன்கள் சேர்த்தார். தனஞ்ஜெயா டி சில்வாவும் (102) சதம் விளாசினார்.
2-வது இன்னிங்சில் மீண்டும் தனஞ்ஜெயா டி சில்வா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த முறை 8-வது வீரராக களம் இறங்கிய 164 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்சிலும் தனஞ்ஜெயா டி சில்வா (108) சதம் விளாசினார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 7-வது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் தனஞ்ஜெயா டி சில்வா- கமிந்து மெண்டிஸ் ஆகிய இரண்டு பேரும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 3-வது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கிரோக் சேப்பல்- கிரேக் சேப்பல், மிஸ்பா-உல்-ஹக்- அசார் அலி ஜோடி இந்த சாதனையைப் படைத்துள்ளது.