கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஆசிய கோப்பையில் முதல் சதம்: சமாரி அத்தபத்து வரலாற்று சாதனை

Published On 2024-07-22 14:05 GMT   |   Update On 2024-07-22 14:05 GMT
  • மலேசியா அணிக்கு எதிராக சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்தார்.
  • 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

தம்புல்லா:

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தம்புலாவில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மலேசியா தரப்பில் வினிப்ரெட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மலேசியா அணி வீராங்கனைகள் இலங்கயின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட், கவிஷா தில்ஹாரி, காவ்யா காவிந்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சமாரி அத்தபத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். மகளிர் டி20 ஆசிய கோப்பையில் முதல் சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

மகளிர் டி20 ஆசிய கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர்கள்:

1 - சமாரி அத்தபத்து: ஜூலை 2024-ல் மலேசியாவுக்கு எதிராக 119*

2 - மிதாலி ராஜ்: ஜூன் 2018-ல் மலேசியாவுக்கு எதிராக 97*

3 - ஹர்ஷிதா சமரவிக்ரம: அக்டோபர் 2022-ல் தாய்லாந்துக்கு எதிராக 81

4 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்: அக்டோபர் 2022-ல் இலங்கைக்கு எதிராக 76

5 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்: அக்டோபர் 2022-ல் யுஏஇ எதிராக 75* 

Tags:    

Similar News