கிரிக்கெட் (Cricket)

என் கண்கள் கலங்கின.. ரிஷப் பண்ட் குறித்து ரவி சாஸ்திரி உருக்கம்

Published On 2024-06-10 09:47 GMT   |   Update On 2024-06-10 09:47 GMT
  • ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
  • அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும்.

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார். அந்த ஸ்பெஷல் விருதை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு வழங்கினார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்து செய்தியை கேட்டு கண் கலங்கியதாக ரவி சாஸ்திரி உருக்கத்துடன் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது கண் கலங்கினேன். அவரை மருத்துவமனையில் பார்த்த போது நிலைமையும் மேலும் மோசமானது. இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா -பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியது இதயத்தை தொடுகிறது.

அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரிடம் துருப்பச்சீட்டு இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த வேலையை தொடருங்கள்.

என்று ரவி சாஸ்திரி கூறினார். 

Tags:    

Similar News