ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி... இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்
- டி20 தரவரிசையை பொறுத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தனது புள்ளிப்பட்டியலில் 113-ல் இருந்து 118 ஆக உயர்த்தியது. பாகிஸ்தான் (116 ரேட்டிங்) மற்றும் இந்தியா (115 ரேட்டிங்) ஆகியவற்றில் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.
பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்தை பாகிஸ்தான் ஒயிட் வாஷ் செய்திருந்தால் அந்த அணி முதலிடத்தை பிடித்திருக்கும்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி நியூசிலாந்து 5 டி20, 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றது. ஓர் ஆட்டத்தில் முடிவில்லை. இதனால், டி20 தொடர் சமன் ஆனது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வீழ்த்தியது. நியூசிலாந்து 104 ரேட்டிங்குடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 101 ரேங்கிங்குடன் 5-வது இடத்திலும் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
டி20 தரவரிசையை பொறுத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.