கிரிக்கெட் (Cricket)
null

இது உங்கள் அறிமுக போட்டி கிடையாது: பாகிஸ்தான் வீரருக்கு கேப்டன் ரிஸ்வான் கொடுத்த ஷாக்..!

Published On 2024-11-09 04:01 GMT   |   Update On 2024-11-09 04:02 GMT
  • பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கம்ரான் குலாம் மெல்போர்ன் டெஸ்டில் களம் இறங்கினார்.
  • கடந்த வருடம் வீரர் ஒருவர் காயம் அடைந்ததால் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கம்ரான் குலாம். ஆல்-ரவுண்டரான இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாமிற்குப் பதிலாக களம் இறங்கினார். அறிமுக போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார்.

தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. புகழ்வாய்ந்த மெல்போர்ன் மைதானத்தில் கம்ரான் குலாம் அறிமுகம் ஆனார்.

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இடையில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தொப்பியை அணிய இருப்பது குறித்து சந்தோசம் அடைந்தார். பொதுவாக ஒரு கிரிக்கெட் வடிவில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அறிமுகம் ஆகும்போது அந்த அணியின் தொப்பி வழங்கப்பட்டு வீரர் கவுரவிக்கப்படுவார்.

அப்படி தனக்கு கவுரவம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கம்ரான் குலாமிடம் உங்களுக்கு தொப்பி வழங்க இயலாது. நீங்கள் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இது கம்ரான் குலாமிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாரிஸ் சோஹைல் களம் இறங்கினார். ஹாரிஸ் சோஹைலை பந்து தாக்க Conscussion என்ற அடிப்படையில் வெளியேற, கம்ரான் குலாம் Conscussion மாற்று வீரரான களம் இறங்கினார்.

ஆனால் பேட்டிங்கும் செய்யவில்லை, பந்தும் வீசவில்லை. பீல்டிங் மட்டுமே செய்தார். இருந்தபோதிலும் ஒரு வீரருக்கு மாற்றாக பேட்டிங் மற்றும் பந்து வீசும் தகுதியுடன் களம் இறங்கியதால் அந்த போட்டியிதான் அறிமுகம் போட்டி என ஒருநாள் போட்டிக்கான தொப்பி வழங்க மறுக்கப்பட்டது.

Tags:    

Similar News