கிரிக்கெட் (Cricket)
null

சச்சின், கோலி, பாபர் அசாம் சாதனையை முறியடித்த ஆப்கன் வீரர் குர்பாஸ்

Published On 2024-11-12 06:03 GMT   |   Update On 2024-11-12 06:07 GMT
  • டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்து சாதனை.
  • சச்சின் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும் அடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு ஷார்ஜாவில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் 77 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

குர்பாஸ்க்கு நேற்றுடன் 22 வயது 357 நாட்கள் முடிவடைந்தது. இதன்மூலம் இளம் வயதில் 8 சதங்களை நிறைவு செய்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

தென்ஆப்பிரிக்காவின் டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்திருந்தார். இதன்மூலம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

சச்சின் தெண்டுல்கர் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும், பாபர் அசாம் 23 வயது 280 நாட்களிலும் 8 சதங்களை எட்டியிருந்தனர்.

அதிக சதங்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். முகமது ஷேசாத் 6 சதங்கள் அடித்துள்ளார். குர்பாஸ் வங்கதேசத்திற்கு எதிராக 3 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஷார்ஜா மைதானத்தில் நேற்றைய சதம் அவரின் 3-வது சதம் ஆகும்.

Tags:    

Similar News