கிரிக்கெட் (Cricket)

ஆண்டர்சனை, சி.எஸ்.கே. ஏலத்தில் எடுக்கும்- இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

Published On 2024-11-12 07:36 GMT   |   Update On 2024-11-12 07:36 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுவிங் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
  • அவர்களது அணியில் எப்போதும் சுவிங் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள்.

புதுடெல்லி:

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். தனது கிரிக்கெட் பயணத்தை அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார். 188 டெஸ்டில் 704 விக்கெட் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முரளிதரன், 'வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். அவர் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனை சி.எஸ்.கே. ஐபிஎல் ஏலத்தில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுவிங் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவர்களது அணியில் எப்போதும் சுவிங் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அதனால், ஜேம்ஸ் ஆண்டர்சனை சி.எஸ்.கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அது எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் சவதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட வீரகள் ஐ.பி.எல். ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News