கம்பீரை அனுப்பாதீங்க: பிசிசிஐ-க்கு மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள்
- அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது.
- செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு அதிரடி தொனியில் வெளிப்படையாக பதில்கள் அளித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பகிரங்கமாக சாடினார்.
இந்த நிலையில் கம்பீருக்கு பொதுவெளியில் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால் அவரை செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுப்பாதீர் என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தள பதிவில், 'கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை இப்போது தான் பார்த்தேன். அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது. அவர் அணிக்கு பின்னணியில் இருந்து மட்டும் வேலை பார்க்கட்டும்.
செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அகர்கர் ஊடகத்தினரை எதிர்கொள்வதில் திறமையானர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.