கிரிக்கெட் (Cricket)

இந்த தருணத்திற்காக 10 ஆண்டுகளாக காத்திருந்தேன்: சஞ்சு சாம்சன்

Published On 2024-11-09 05:33 GMT   |   Update On 2024-11-09 05:33 GMT
  • நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன்.
  • நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகள் விருதை வென்றார். ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன். இந்த தருணத்திற்காக நான் 10 ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன். ஆனால் நான் என் கால்களை தரையில் வைக்க விரும்புகிறேன், இந்த தருணத்தில் அதில் இருக்க விரும்புகிறேன்.

ஆடுகளத்தில் என்னுடைய நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். ஆக்ரோசமாக விளையாடி அணியை நீங்களே முன்னதாக கொண்டு சொல்ல வேண்டும் என அணியில் பேசிக்கொண்டோம். அந்த எண்ணத்துடன் விளையாடினேன்.

மூன்று நான்கு பந்துகளை சந்தித்தபின், பவுண்டரி அடிக்க வேண்டும் எனத் தோன்றும். நான் அதை பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. சில நேரம் இது சாத்தியமாகும். சில நேரம் சறுக்கல் ஏற்படும். இன்று எனக்கு சரியாக வேலை செய்தது மகிழ்ச்சியாக விசயம். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிக முக்கியமானது. சிறந்த அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு சொந்த மண் கூடுதல் சாதகமாக இருக்கும்.

இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

Tags:    

Similar News