null
அந்த விஷயம் நடந்தால் ஓய்வு அறிவித்து விடுவேன்: அதிர்ச்சி தகவல் சொன்ன ரோகித் சர்மா
- டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர்
- கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர் என தெரிவித்தார்.
பின்னர், ஓய்வு அறிவிப்பு குறித்து ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோகித் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.