ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணியை ஒருமுறை கூட வென்றதே இல்லை.. தொடரும் மும்பை அணியின் சோகம்
- பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி நுழைந்தது.
- மற்ற 3 இடங்களை பிடிக்க 7 அணிகள் போட்டி போட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணி முதல் நான்கு இடங்களை பிடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி நுழைந்தது. மற்ற 3 இடங்களை பிடிக்க 7 அணிகள் போட்டி போட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் 10 ஓவரில் 92 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த 10 ஓவரில் சுமாராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணியை ஒருமுறை கூட மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதே இல்லை என்ற சோகம் தொடர்கிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 3 முறை மோதியுள்ளது. இந்த மூன்றிலுமே லக்னோ அணியின் வெற்றி வாகை சூடியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 21-ந் தேதி ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது.