கிரிக்கெட் (Cricket)

ரவி பிஷ்னோய் அபார பந்துவீச்சு: முதல் டி20 போட்டியில் 115 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே

Published On 2024-07-06 12:44 GMT   |   Update On 2024-07-06 12:44 GMT
  • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.

ஹராரே:

ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

Similar News