கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

Published On 2024-01-04 15:57 GMT   |   Update On 2024-01-04 15:57 GMT
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
  • இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

துபாய்:

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

இதற்கிடையே, முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. மற்றொன்று டிரா ஆனது. இதன்மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.

இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது.

ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Tags:    

Similar News