கிரிக்கெட் (Cricket)

ஐசிசி மீது அதிருப்தி: தனியார் ஜிம்மில் இந்திய வீரர்கள்

Published On 2024-06-12 15:04 GMT   |   Update On 2024-06-12 15:04 GMT
  • தொடக்க சுற்றின் பெரும்பாலான போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
  • தற்காலிக பிட்ச் அமைக்கப்படுள்ள நிலையில், வீரர்களுக்கான வசதி மிகவும் குறைவு என ஐசிசி மீது புகார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் மூன்று போட்டிகளை நியூயார்க்கில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், இன்று 3-வது போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தொடக்க சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது. தற்காலிக பிட்ச் உள்ளிட்ட மைதான வேலைகளை செய்த போதிலும் வீரர்கள் தங்கும் அறைகள், உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள், மைதானத்திற்கு வெகு தொலைவில் ஓட்டம் போன்ற விமர்சனங்கள் பல்வேறு அணிகளால் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு லாங் தீவில் ஓட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் தரமான உடற்பயிற்சி கூடம் (ஜிம்) இல்லை எனத் தெரிகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

மேலும், நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் போதுமான வசதி இல்லாமலும் இந்திய வீரர்கள் அவதிப்படுகிறார்கள்.

வீரர்கள் சிறந்த முறையில் உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளூர் ஜிம்மில் இந்திய வீரர்களை உறுப்பினர்களாக்கி பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் வசதி குறைபாடு என இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இதுவரை புகார் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணி தங்களுக்கான பாதகமான வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டதாக இந்நாட்டு மந்திரி புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News