கிரிக்கெட் (Cricket)

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இந்தியா பந்து வீச்சு தேர்வு- சாம்சனுக்கு வாய்ப்பு

Published On 2024-07-28 14:07 GMT   |   Update On 2024-07-28 14:07 GMT
  • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
  • இந்த போட்டியில் கில்லுக்கு பதிலாக சாம்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

பல்லகெலே:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Tags:    

Similar News