கிரிக்கெட் (Cricket)
null
இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல்
- இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
- இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்தது. இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அந்த ஆடுகளத்துக்கு 3 அபராத புள்ளிகளை வழங்கினார்.
இந்த நிலையில் இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, `நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுப் போம்' என்றார். ஐ.சி.சி. விதிகளின்படி மேல்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. ஒரு மைதானம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அபராத புள்ளிகளை பெற்றால் அங்கு 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.