முக்கிய தொடர்களில் கேப்டன்களே ஓய்வு எடுத்து கொள்கிறார்கள்- ரோகித்தை விமர்சித்த ஜடேஜா
- இளம் வீரர்களை வங்கதேசம் போன்ற தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடுகிறார்கள்.
- நீங்கள் நாட்டுக்காக விளையாடும்போது அணிக்கு நீங்கள் தேவை என்கிறபோது நீங்கள் வேறு நாட்டிற்குச் சென்று டி20 தொடரில் விளையாடினால் அது நிச்சயம் சிக்கலை கொடுக்கும்.
மும்பை :
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நியூசிலாந்து போன்ற பெரிய அணியை எதிர்கொள்ளும் போது சீனியர்களுக்கு ஓய்வு வழங்குவது சரியா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து அஜய் ஜடேஜா கூறியதாவது:-
எந்த கிரிக்கெட் வீரர்களும் தங்கள் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடரில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீங்கள் நாட்டுக்காக விளையாடும்போது அணிக்கு நீங்கள் தேவை என்கிறபோது நீங்கள் வேறு நாட்டிற்குச் சென்று டி20 தொடரில் விளையாடினால் அது நிச்சயம் சிக்கலை கொடுக்கும்.
இளம் வீரர்களை வங்கதேசம் போன்ற தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடுகிறார்கள். இந்த கலாச்சாரம் மிகவும் தவறு. தற்போது கத்துக்குட்டி அணிகளும் சிறப்பாக விளையாட தொடங்கிவிட்டனர்.
அவர்களுக்கு எதிராக நீங்கள் விளையாடினால் மட்டுமே அவர்கள் வளர்ச்சி அடைய முடியும். ஆனால் இப்போது கேப்டன்களே (ரோகித் சர்மாவை தாக்கும் விதமாக ) தொடர்களில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.
இவ்வாறு அஜய் ஜடேஜா கூறினார்.