கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை: காயத்தால் தொடரில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை

Published On 2024-07-21 10:40 GMT   |   Update On 2024-07-21 10:40 GMT
  • நடப்பு தொடரில் இருந்து ஷ்ரேயங்கா பாட்டீல் காயம் காரணமாக விலகினார்.
  • அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கொழும்பு:

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஷ்ரேயங்கா பாட்டீல் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை விரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News